தமிழகம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது. சமசுகிருத மற்றும் பிரக்கிருத இலக்கியங்களில் தமிழகத்தை 'திராவிடா' என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக இந்தப் பகுதி ஒற்றைப் பண்பாட்டுப் பகுதியாகவும், தமிழ் மொழியே இயல்பு மொழியாகவும் இருந்துள்ளது.மேலும் அனைத்து மக்களின் பண்பாடும் தமிழர் பண்பாடாகவே இருந்துள்ளது. ]வரலாற்றிற்கு முந்தைய கேரள மற்றும் தமிழ் நாட்டில் கிடைக்கப்பெற்ற அகலாய்வு தரவுகளை பார்க்கும் பொழுது தமிழகம் தனி ஒரு பண்பாட்டுப் பகுதியாக இருந்ததை உறுதியாகச் சொல்லமுடியவில்லை
சங்ககாலப் பகுதியில் தமிழ் பண்பாடு தமிழகத்தை சுற்றியுள்ள பகுதியிலும் பரவியது
No comments:
Post a Comment